உள்ளூர் செய்திகள்

விவசாயிகளிடம் கருத்துகளைக் கேட்ட பிறகு தூர்வாரும் பணி மேற்கொள்ள வேண்டும்

Published On 2023-03-30 09:45 GMT   |   Update On 2023-03-30 09:46 GMT
  • கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
  • திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் தலைவர் ரவிசந்தர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கோடை நெல் சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளோம்.

எனவே விதை, உரம் ஆகியவற்றை அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களிலும், தனியார் உரக்கடைகளிலும் இருப்பு வைக்க வேண்டும்.

மாவட்டத்தில் விவசாயி களிடம் கருத்துக்களை கேட்ட பிறகு தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

வெண்ணாறு கோட்டம் பிள்ளை வாய்க்காலில் இருந்து பிரியும் கழுமங்கலம் வாய்க்கால் தலைப்பில் இருந்து இறுதி வரை வெட்டி தூர்வார வேண்டும்.

விவசாயிகளுக்கு களைக்கொல்லி மருந்து 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும்.

சத்துணவு திட்டத்தில் மதிய உணவில் வாரம் இரண்டு வாழைப்பழம் வழங்கினால் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும்.

இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News