உள்ளூர் செய்திகள்

அரசு அங்கீகாரம் பெறாத பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் - கோவை மாவட்ட கல்வி அதிகாரி வேண்டுகோள்

Published On 2023-05-31 09:39 GMT   |   Update On 2023-05-31 09:39 GMT
  • மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியாகும்.
  • அங்கீகாரம் பெறாத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் மூடப்படும்.

கோவை,

கோவை மாவட்ட கல்வி அதிகாரி கீதா கூறி இருப்பதாவது:-

கோவை மாவட்ட கல்வி அலுவலரின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும் தனியார் நர்சரி பள்ளிகளில் அங்கீகாரம் பெறாதவை, ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியவை, கூரைகள் உடன் செயல்படுபவை, அடுக்குமாடி குடியிருப்புகளில் செயல்படுபவை ஆகியவற்றை தமிழக அரசின் புதிய உத்தரவின்படி மூடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இருந்தபோதிலும் ஒருசில கோப்புகள் பரிசீலனையில் இருப்பதால், அந்த பள்ளிகளின் பெயர் வெளியிடப்படவில்லை. அரசு அனுமதி பெற்ற தனியார் பள்ளிகளின் பெயர்கள் விடுபட்டு இருப்பின், அடுத்த பெயர் பட்டியலில் அறிவிக்கப்படும். எனவே தமிழக அரசின் அங்கீகாரம் பெறாத எந்த பள்ளிகளிலும், பெற்றோர்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டாம். நீண்ட காலமாக அங்கீகாரம் புதுப்பிக்காத நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் பெயர் பட்டியல் அடுத்த வாரம் வெளியிடப்படும். அப்போது மூடப்பட வேண்டிய பள்ளிகளின் பெயர்களும் வெளியாகும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News