மதியழகன் எம்.எல்.ஏ.
கிருஷ்ணகிரியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள்- 3 நாட்கள் நடக்கிறது
- கிருஷ்ணகிரி,மே.6- இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
- கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள் நாளை தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், தமிழக முதல் -அமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆணைப்படி, திராவிட மாடல் ஆட்சியின் 2 ஆண்டு கால சாதனைகளை விளக்கி கிருஷ்கிரி மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை 3 நாட்கள் நடக்கிறது.
அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊத்தங்கரை தெற்கு ஒன்றியம் கல்லாவி பஸ் நிலையத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.
கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியம் பெத்ததாளப்பள்ளி பாரத கோவிலில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் குடியாத்தம் குமரனும், மத்தூர் வடக்கு ஒன்றியத்தில் குன்னத்தூரில் மாலை 5.30 மணிக்கு தலைமை கழக பேச்சாளர் கருணாநிதியும், காவேரிப்பட்டணம் கிழக்கு ஒன்றியம் அகரம் கூட்டு ரோட்டில் மாலை 6 மணிககு தலைமை கழக பேச்சாளர் வயலூர் கிருஷ்ணமூர்த்தியும் பேசுகிறார்கள்.
நாளை மறுநாள் (திங்கட் கிழமை) காவேரிப்பட்டணம் மேற்கு ஒன்றியம் பையூர் பெரியார் சிலை அருகில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் நான் பேசுகிறேன்.
மத்தூர் தெற்கு ஒன்றியம் சாமல்பட்டடியில் மாலை 5.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சூர்யா வெற்றி கொண்டானும், ஊத்தங்கரை மத்திய ஒன்றியம் மிட்டப்பள்ளியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தமிழ் கொண்டான் பேசுகிறார்.
தொடர்ந்து 9-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பர்கூர் தெற்கு ஒன்றியம் ஜெகதேவியில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் தமிழக துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பேசுகிறார். அன்றைய தினம் போச்சம்பள்ளி பஸ் நிலையத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியும், கிருஷ்ணகிரி நகரம் 5 ரோடு ரவுண்டானா அருகில் நடைபெறும் கூட்டத்தில் நானும், ஊத்தங்கரை வடக்கு ஒன்றியம் மகனூர் பட்டியில் நடக்கும் கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் சுபா சந்திரசேகரும், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றியம் குருபரப்பள்ளி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் பிரம்மபுரம் பழனியும், பர்கூர் வடக்கு ஒன்றியம் ஒப்பதவாடி கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் தா.பழூர் இளஞ்செழியனும் பேசுகிறார்கள்.
இந்த பொதுக்கூட்ட ங்களுக்கு சம்பந்தப்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திட வேண்டும். கூட்டங்கள் சிறப்பாக நடத்துவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
அதே போல நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களுக்கு மாநில, மாவட்ட நகர, ஒன்றிய, பேரூர் கழக கிளை நிர்வாகிகள், பி.எல்.ஏ.2 வாக்குச்சாவடி முகவர்கள் உறுதுணையாக இருக்க கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.