உள்ளூர் செய்திகள்

தி.மு.க. உட்கட்சி தேர்தலில் ஒசூர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட, மேயர் சத்யா விருப்ப மனு

Published On 2022-08-10 14:33 IST   |   Update On 2022-08-10 14:33:00 IST
  • மாநகர செயலாளர் பதவி மற்றும் நிர்வாகி களுக்கான வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • தேர்தல் அதிகாரியும், மாநில விவசாய அணி துணை அமைப்பாளரு மான அன்னியூர் சிவா, விருப்பமனுக்களை வழங்கினார்.

ஓசூர்,

தி.மு.க. உட்கட்சி தேர்தலையொட்டி, ஓசூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளில், 4 பகுதிகளாக பிரித்து அண்மையில் பகுதி செயலாளர்கள் தேர்தல் முடிவ டைந்தது.

இதனைத் தொடர்ந்து மாநகர செயலாளர் பதவி மற்றும் நிர்வாகி களுக்கான வேட்புமனு வழங்கும் நிகழ்ச்சி, நேற்று தளி சாலையில் உள்ள கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தி.மு.க. அலுவல கத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி க்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்ஏ.வுமான ஒய்.பிரகாஷ் தலைமை தாங்கினார்.

தேர்தல் அதிகாரியும், மாநில விவசாய அணி துணை அமைப்பாளரு மான அன்னியூர் சிவா, விருப்பமனுக்களை வழங்கினார்.

இதில், கட்சியின் ஓசூர் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிட ஓசூர் மாநகர தி.மு.க. பொறுப்பாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அப்போது, மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் சுகுமாரன், துணைமேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர்கள் எம்.கே.வெங்கடேஷ், எம்.ராமு, திம்மராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

அவரை தவிர்த்து வேறு யாரும் மாநகர செயலாளர் பதவிக்கு போட்டியிடாத நிலையில், சத்யா மாநகர செயலாளர் பொறுப்புக்கு போட்டியின்றி தேர்வாக உள்ளார்.

Tags:    

Similar News