செங்கோட்டையில் நகர தி.மு.க. செயலாளர் வெங்கடேசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி செங்கோட்டையில் நகர தி.மு.க. ஆலோசனை கூட்டம்
- வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
- கூட்டத்தில் 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு முதல்-அமைச்சரை வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகிற 8-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்று மாவட்டத்திற்கு முதல் முறையாக அவர் வர இருப்பதால் செங்கோட்டை நகர தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு நகரச்செயலாளா் வெங்கடேசன் தலைமை தாங்கினார். இதில் வருகிற டிசம்பர் மாதம் 8-ந் தேதி தென்காசி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிட வருகை தரும் முதல்-அமைச்சருக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்சிவபத்மநாதன் ஆலோசனையின் பேரில் சிறப்பான வரவேற்பு வழங்கிடும் வண்ணம் செங்கோட்டை குண்டாறு ஆற்றுப்பாலம் முதல் நித்தியகல்யாணி அம்மன் கோவில் ஆற்றுப்பாலம் வரை சாலையின் இரு புறத்திலும் நிர்வாகிகள், பொதுமக்கள் என 3000-த்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வரவேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் லிங்கராஜ், நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்துசரோஜா, ராஜா, பொருளாளர் தில்லை நடராஜன், மாவட்ட பிரதிநிதிகள் பீர்முகமது, மணிகண்டன், சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். நெல்லை மண்டல தொ.மு.ச. மத்திய சங்க துணைச்செயலாளா் ரவீந்திரன் நன்றி கூறினார்.