சங்ககிரி வட்டத்தில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாளில் சேலம் கலெக்டர் கார்மேகம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
301 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
- சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட 44 கிராமங்களின் வருவாய் கணக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மொத்தம் 1,701 மனுக்களை வழங்கினர்.
சங்ககிரி:
சேலம் மாவட்ட கலெக்டரும், சங்ககிரி வட்ட ஜமாபந்தி அலுவலருமான கார்மேகம் கடந்த 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை, சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட 44 கிராமங்களின் வருவாய் கணக்குகளின் கோப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று, கெடிகாவல், வைகுந்தம், அக்ரஹாரம் தாழையூர், காளிகவுண்டம் பாளையம், கன்னந்தேரி, அபுதூர், ஏகாபுரம், இடங்கணசாலை, தப்பகுட்டை, நடுவனேரி, எர்ணாபுரம், கனககிரி, கூடலூர், கண்டர் குலமா ணிக்கம் உள்ளிட்ட கிராமங்க ளின் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்தார். அவரிடம் 579 கோரிக்கை மனுக்கள் வழங்கினர்.
கடந்த 4 நாட்களாக நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மொத்தம் 1,701 மனுக்களை வழங்கினர். இதனையடுத்து நேற்று மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் மாவட்ட கலெக்டர் தலைமை வகித்து இலவச வீட்டு மனை பட்டா 58, பட்டா மாறுதல் உத்தரவு 27, சர்வே எண் உட்பிரிவு பட்டா மாறுதல் உத்தரவு 22, முதியோர் உதவித் தொகை 141, புதிய குடும்ப அட்டை 53 பேருக்கு என மொத்தம் 301 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார்.
இதில் சங்ககிரி வட்டாட்சி யர் அறிவுடைநம்பி வர வேற்றார். வருவாய் கோட்டாட்சியர் தணிகாச லம், நில அளவை உதவி இயக்குனர் ராஜசேகர், மாவட்ட மேலாளர் நீதியல் சீனிவாசன், சமூக பாது காப்பு நலத்துறை ராஜேந்தி ரன், மண்டல துணை வட்டாட்சியர் ரமேஷ், தேர்தல் வட்டாட்சியர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனி வட்டாட்சியர் லெனின் நன்றி கூறினார்.