உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு உளுந்து விதை வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்கு உளுந்து விதை விநியோகம்

Published On 2022-11-13 10:15 GMT   |   Update On 2022-11-13 10:15 GMT
  • இரண்டு முறை டி.ஏ.பி. உரம் தெளித்திட 10 கிலோ டி.ஏ.பி உரம் வழங்கப்படுகின்றன.
  • பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது.

பாபநாசம்:

பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

தமிழ்நாடு மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாற்றுப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு விவசாயிக்கு ஒரு ஏக்கருக்கு உரிய எட்டு கிலோ உளுந்து விதை 50 சத மானியத்திலும், இரண்டு முறை டி ஏ பி உரம் தெளித்திட 10 கிலோ டிஏபி உரமும் வழங்கப்படுகின்றன. எதிர்வரும் கார்த்திகை பட்டத்தில் உளுந்து சாகுபடி செய்ய உள்ள விவசாயிகளும், சம்பா, தாளடி நெல் வயல்களில் வரப்பில் உளுந்து விதைப்பு செய்திடவும் இந்த உளுந்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதன் மூலம் பூச்சி, நோய் தாக்குதல் கட்டுப்படுத்தப்படுகிறது. மண்வளம் பாதுகாக்கப்படுகிறது. எனவே, தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டை நகல், உழவர் அட்டை நகல் ஆகியவற்றுடன் சென்று பாபநாசம், கணபதி அக்ரஹாரம், மற்றும் கூனஞ்சேரி ஆகிய விரிவாக்க மையங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News