உள்ளூர் செய்திகள்

நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு சீருடையை சரக டி.ஐ.ஜி. கயல்விழி வழங்கினார்.

ஏழ்மையான அரசு பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு சீருடை சரக டி.ஐ.ஜி. கயல்விழி வழங்கினார்

Published On 2022-10-22 09:57 GMT   |   Update On 2022-10-22 09:57 GMT
  • அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு 50 நபர்களுக்கு பள்ளி சீருடை வழங்குகினர்.
  • போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயாரித்தார்.

தஞ்சாவூர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்பில் பயிலும் மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள மாணவர்களை கணக்கெடுத்து 50 நபர்களுக்கு அவர்களது உடலுக்கு தகுந்தாற்போல் அளவெடுத்து பள்ளி சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தஞ்சை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தனது சொந்த செலவில் மாணவர்களுக்கு சீருடை தயார் செய்தார்.

இந்த சீருடையை தஞ்சை சரக டி.ஐ.ஜி. கயல்விழி கலந்துகொண்டு மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News