உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய தருமபுரி வாலிபர் உள்பட 3 பேர் கைது

Published On 2023-08-03 15:17 IST   |   Update On 2023-08-03 15:17:00 IST
  • ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் பணம் வைத்து சூதாடிய தேர்பேட்டையை சேர்ந்த சந்திரன், பாபு, தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டையை சேர்ந்த நவீன்குமார் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News