உள்ளூர் செய்திகள்

தருமபுரி அங்காடியில் ரூ.11 லட்சத்துக்கு பட்டுக்கூடு விற்பனை

Published On 2023-08-15 15:37 IST   |   Update On 2023-08-15 15:37:00 IST
  • அங்காடிக்கு நேற்று 2,294 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன.
  • மொத்தம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

தருமபுரி, 

தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.

இந்த அங்காடிக்கு நேற்று 2,294 கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு வந்தன. ஒரு கிலோ பட்டுக்கூடு அதிக பட்சமாக ரூ.607-க்கும், குறைந்தபட்சமாக ரூ.258-க்கும், சராசரியாக ரூ.480.70-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.11 லட்சத்து 3 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது.

Tags:    

Similar News