உள்ளூர் செய்திகள்

தருமபுரி அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு டிஜிட்டல் எந்திரங்கள்

Published On 2023-08-11 15:06 IST   |   Update On 2023-08-11 15:06:00 IST
  • மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள எந்திரங்கள் வழங்கப் பட்டது.
  • பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி மாணவ, மாணவியருக்கு எந்திரங்களை வழங்கினார்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், ரயில் நிலையம் அருகே உள்ள பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஒலி வடிவில் எண், எழுத்துக் களை டிஜிட்டல் முறையில் காண நவீன எந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் சார்பில் ரூ.11 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள எந்திரங்கள் வழங்கப் பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் பொது மேலாளர் பாலு கலந்து கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர் ரெஜினா மேரி மாணவ, மாணவியருக்கு எந்திரங்களை வழங்கினார்.

Similar News