உள்ளூர் செய்திகள்

விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் முகாமிட்டுள்ள மருத்துவக் குழுவினரை படத்தில் காணலாம்.

விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டையில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்

Published On 2023-05-20 07:38 GMT   |   Update On 2023-05-20 07:38 GMT
  • கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர்.
  • இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.

கடலூர்:

விருத்தாசலம் அருகே புதுக்கூரைப்பேட்டை கிராமம் உள்ளது. இங்கு 800-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 நாட்களாகவே இங்கு வசிப்பவர்கள் காய்ச்சல், உடல் வலி போன்றவைகளால் அவதியுற்று வந்தனர். இவர்கள் தனியார், அரசு ஆஸ்பத்திரிகளில் வெளிப்புற நோயாளி களாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களிடம் இருந்து ரத்தம் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இத்தகவல் மங்கலம்பே ட்டை மருத்துவ அதிகாரி களுக்கு தெரிய வந்தது. மேலும், 9-க்கும் மேற்பட்டோர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டாக்டர் பிரதாப் பிரதாப், வட்ட சுகாதார மேற்பார்வையாளர் ரவிசந்திரன், சுகாதார ஆய்வாளர்கள் முருகவேல், அபினாஷ், முல்லைநாதன், நர்சுகள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் புதுக்கூரைப்பேட்டைக்கு இன்று காலை வந்தனர். இவர்கள் கிராமத்தில் உள்ள வீதிகளில் பிளிச்சிங் பவுடர் தெளித்தனர். கிராமம் முழுவதும் கொசு மருந்து அடித்தனர். தொடர்ந்து வீடு வீடாக சென்று கிராம மக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர். காய்ச்சல் அறிகுறிகள் ஏதாவது தென்பட்டால், தனிமைப்படுத்தி க்கொண்டு சிகிச்சை பெற வலியுறு த்தினர். அவர்களுக்கு ஊசிகள் மற்றும் மாத்திரைகள் வழங்கினர். தொடர்ந்து கிராம மக்களின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் புதுக்கூரைப்பேட்டை கிராம மக்களிடையே அச்சமும் பரபரப்பும் நிலவுகிறது.

Tags:    

Similar News