ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜனதாவினர்.
கள்ளச்சாராய விற்பனையை தடுக்கக்கோரி பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க.வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
நெல்லை:
கள்ளச்சாராயத்தை கண்டுகொள்ளாமல் தி.மு.க. அரசு மெத்தன போக்காக செயல்படுவதாக கூறி தமிழகம் முழுவதும் இன்று பா.ஜனதா மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட பா.ஜனதா மகளிரணி தலைவர் ஜெய சித்ரா தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட மகளிரணி பொதுச் செயலாளர் கார்த்தீஸ்வரி வரவேற்றார். மகளிரணி தலைவர் தட்சணா கண்டன உரையா ற்றினார். வடக்கு மாவட்ட தலைவர் தயாசங்கர், தெற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட பொதுச் செயலா ளர்கள் சுரேஷ், வேல் ஆறுமுகம், முத்து பலவே சம், மாவட்ட செயலாளர்கள் நாகராஜன், வக்கீல் வெங்க டாஜலபதி, மேகநாதன், பொருளாளர் சக்சஸ் சுந்தர், மண்டல தலைவர்கள் குருகண்ணன், பெரியதுரை, இளைஞரணி துணை தலைவர் ஜெட் ராஜா, வக்கீல் சிவசூரிய நாராயணன் மற்றும் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.