உள்ளூர் செய்திகள்

ஆலோசனை கூட்டம் நடந்தது.

தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கண்டித்து 9-ந் தேதி ஆர்ப்பாட்டம்

Published On 2023-03-07 10:06 GMT   |   Update On 2023-03-07 10:06 GMT
  • நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
  • ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியம் ரூ. 4000 வழங்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் செயல்படும் அனைத்து சங்க ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடைபெற்றது.

ஐ.என்.டி.யூ.சி பொதுசெயலாளர் இளவரி தலைமை வகித்தார்.

ஏ.ஜ.டி.யூ.சி சங்க மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், சி. ஐ. டி .யூ சங்க மாநில பொதுச் செயலாளர் புவனேஸ்வரன், பாட்டாளி சங்க தலைவர் முருகன், அம்பேத்கர் தொழிற்சங்க மாநிலத் தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

கூட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகத்தை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மாத கருணை ஓய்வூதியும் ரூ. 4000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்து கொள்முதல் நிலையங்கள், கிடங்குகள், சேமிப்பு நிலையங்கள், நவீன அரிசி ஆலைகள் முன்பு வருகின்ற 9-ந்தேதி ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதில் அனைத்து சங்க நிர்வாகிகள் தரக் கட்டுப்பாடு மேலாளர் ஓய்வு வேணுகோபாலன், அன்பழகன், சிவானந்தம், மணியரசன், புவனேஸ் வரன், பாண்டியன், பழனிவேல், ராஜ்குமார், மணிமாறன், அம்பிகாபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏஐடியூசி மாநில பொருளாளர் கோவிந்த ராஜன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

முடிவில் மாவட்ட பொருளாளர் தியாகராஜன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News