உள்ளூர் செய்திகள்
ஓசூரில் சி.பி.எம் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
- சி.பி.எம்.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- பிரச்சினை களை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஓசூர்
ஓசூர் ஒன்றிய சி.பி.எம்.கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, ஓசூர் ஒன்றிய செயலாளர் ராஜா ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் நஞ்சுண்டன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான டில்லி பாபு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பு ரையாற்றினார். மேலும், மாநகர செயலாளர் சி.பி.ஜெயராமன் உள்பட பலர் பேசினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில், ஓசூர் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிலவி வரும் பிரச்சினை களை தீர்க்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில், கட்சியினர் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.