ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
நீட் தேர்வுக்கு எதிராக திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
- நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- நீட் தேர்வினால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
நெல்லை:
திராவிடர் கழகத்தின் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட கழக இளைஞரணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மாணவர் அணி தலைவர் சூர்யா தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் வீரபாண்டிய கட்டபொம்மன் வரவேற்றார். மாவட்ட காப்பாளர்கள் காசி, வேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வேல்முருகன் தொடக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக சுப சோமசுந்தரம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் கல்வியாளர் ராஜவர்மன், மாவட்ட தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆர்ப்பாட்டத்தின் போது நீட் தேர்வினால் இதுவரை 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே மத்திய அரசு உடனடியாக இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.