உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

திறன் பயிற்சி முடித்தவர்களுக்கு பட்டம்

Published On 2023-10-28 14:57 IST   |   Update On 2023-10-28 14:57:00 IST
  • திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனைவரையும் வரவேற்றார்.
  • இதில் பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி:

இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவனத்தில் திறன் பயிற்சி முடித்த பயனாளிகளுக்கு திறன் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

விழாவில் திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன தலைவர் கவுசல்யா அன்பரசு தலைமை தாங்கினார். ஸ்கார்டு செயலாளர் பாபுராஜன், ஜெகன், தொழி ற்பயிற்சி நிறுவன தலைவர் கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் செந்தாமரை செல்வி அன்பழகன், ஊராட்சி தலைவர் எழிலரசி மணிச்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருவாரூர் மக்கள் கல்வி நிறுவன இயக்குநர் பாலகணேஷ் அனை வரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் கருடா சேவகர் இளவரசு கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். விழாவில் மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஹேமலதா, பாசறை ராஜேந்திரன், ராணி சேகர், கலையழகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதில் மக்கள் கல்வி நிறுவன அலுவலர்கள் கனக துர்கா, மீனாட்சி, திலகவதி, சத்தியவாணி, பயிற்றுனர்கள் மற்றும் பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News