உள்ளூர் செய்திகள்
மேயர் சுந்தரி ராஜாவிடம் வணிகர் சங்க மாவட்ட தலைவர் இராம. முத்துக்குமரனார் மனு அளித்த போது எடுத்த படம்.
கடலூர் துறைமுகம் மணிக்கூண்டு பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை அமைக்க வேண்டும்: மேயரிடம் வணிகர் சங்கம் வலியுறுத்தல்
- கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.
- மணிக்கூண்டுக்கு அருகிலுள்ள பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம் வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர் என தெரிவித்தனர்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவிடம் கடலூர் மாவட்ட வணிகர் சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் இராம. முத்துக் குமரனார் மனு அளித்தார்.கடலூர் துறைமுகம் மணிக்கூண்டுக்கு அருகில் பஸ் நிறுத்தம் உள்ளது. பக்கத்தில் உள்ள கிராமங்களின் மக்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை இல்லாமல் உள்ளது. இதனால் மழை காலங்களிலும், அக்னி நட்சத்திரம்வெயிலிலும் மக்கள் பஸ் நிறுத்தத்தில் அவதிப்படுகினறனர். எனவே அவசர தேவையாக பஸ் நிறுத்தத்தில் மேற் கூரை அமைத்து தர வேண்டும். அப்போது கடலூர் துறைமுகம் நகர தலைவர் ரவிக்குமார்,இளைஞரணி தலைவர் ராஜேஷ் உடன் இருந்தனர்.