உள்ளூர் செய்திகள்

சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் கிரீடம் சூட்டி கவுரவிக்கப்பட்டனர்.

தூய்மை பணியாளர்களுக்கு கிரீடம் சூட்டி கவுரவிப்பு

Published On 2023-09-11 16:28 IST   |   Update On 2023-09-11 16:28:00 IST
  • 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
  • வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாநகராட்சி யின் அனைத்து கோட்டங்க ளிலும் மாநகரின் தூய்மைக்கான மக்கள் இயக்க தொடர் நிகழ்வின் ஓர் அங்கமாக தஞ்சாவூர் மாநகராட்சியில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாநகராட்சி மேயர் சண். இராமநாதன் தலைமை வகித்தார்.

ஆணையர் சரவணகுமார் , மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தற்போது குப்பைகள் இல்லா மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி உருவாகிறது.

"எனது குப்பை எனது பொறுப்பு" என்பதை வலியுறுத்தி தஞ்சாவூர் மாநகராட்சியில் பணியாற்றி வரும் பரப்புரையயளர்கள் மூலமாக 51 வார்டுகளிலும் உள்ள வீடுகள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டு வருகிறது.

கடந்த ஒரு ஆண்டாக ஜெபமாலை புரத்தில் உள்ள குப்பை கிடங்கிற்கு செல்லாத வகையில் தூய்மை பணியாளர்கள் இணைந்து கொண்டு தஞ்சாவூர் மாநகராட்சி முழுவதும் செயல்பட 10 நுண்உர செயலாக்க மையங்கள் மூலமாக மக்கும் மற்றும் மக்கா குப்பைகள் தரம் பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.

மேலும் தஞ்சாவூர் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்களின் பணியானது மகத்தான பணி என்று பாராட்டினர்.

இதனை யடுத்து 14 கோட்டங்களிலும் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் லெட்சுமி, மாரியாயி, பாலகிருஷ்ணன், உலகநாதன், ராஜ்குமார், சுசிலா, சண்முகம், கணபதி, முத்துசாமி, முருகேசன், குருசாமி, கனகவள்ளி ஆகியோருக்கு மாலை அணிவித்து கீரிடம் சூட்டி நினைவு பரிசினை வழங்கினர்.

Tags:    

Similar News