உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் பூமிக்கு அடியில் நீரோட்டம் அதிகரிப்பால் வீடுகளில் விரிசல்

Published On 2022-08-18 10:28 GMT   |   Update On 2022-08-18 10:28 GMT
  • விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது.
  • புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் நடுகூடலூா் பகுதியில் பல வீடுகளின் சுவா்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா்.

இந்த விரிசல் எப்படி ஏற்பட்டது என தெரியாததால் பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. பல வீடுகளில் சுவா் பிளந்த நிலையில் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து வருவாய்த் துறையினா் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா். தொடா்ந்து ஊட்டியில் உள்ள மத்திய நீா் மற்றும் மண்வள ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி டாக்டா் மணிவண்ணன் தலைமையில் புவியியல் மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் அந்தப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.

அதிக அளவில் பெய்த மழையின் காரணமாக பூமிக்கடியில் நீரோட்டம் அதிகரித்துள்ளதால் இந்த திடீா் பிளவு ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தரப்பில் கூறினா்.

தொடா்ந்து இது குறித்து ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் கூறினா். 

Tags:    

Similar News