உள்ளூர் செய்திகள்

காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் நடந்து செல்பவா்களுக்கு பிரத்யேக சாலை அமைக்க மாநகராட்சி திட்டம்

Published On 2022-07-29 14:57 IST   |   Update On 2022-07-29 14:57:00 IST
  • ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.
  • மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது.

கோவை:

கோவை மாநகராட்சியில் ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின்கீழ் உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், முத்தண்ணன் குளம் உள்ளிட்ட குளங்களில் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு, மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை, சிறுவா் பூங்கா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

ஸ்மாா்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக மாநகரின் முக்கிய சாலைகளில் மிதிவண்டியில் செல்பவா்களுக்கு பிரத்யேக பாதை, நடந்து செல்பவா்களுக்கு தனிப்பாதை அமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி சோதனை அடிப்படையில் கோவை மாநகராட்சி எதிரே டவுன்ஹாலில் நடந்து செல்பவா்களுக்கு ஒரு பாதை, மிதிவண்டியில் செல்பவா்களுக்கு ஒரு பாதை என தனியாக அமைக்கப்பட்டன. இதேபோல, காந்திபுரம் கிராஸ்கட் சாலையிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதைத் தொடா்ந்து, தற்போது கிராஸ்கட் சாலையில் நடந்து செல்பவா்களுக்கு பிரத்யேக சாலைகள் நிரந்தரமாக அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:-

கோவை கிராஸ்கட் சாலை, டவுன்ஹால் சாலையில் சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட வண்ணமயமான பிரத்யேக மிதிவண்டிப் பாதை, நடைப்பாதை திட்டங்களை ெகாரோனா பாதிப்பு காரணமாக கடந்த காலங்களில் நிரந்தரமாக செயல்படுத்த முடியவில்லை.

தற்போது, முதல்கட்டமாக மாநகரில் கிராஸ்கட் சாலையில் வண்ணம் பூசப்பட்டு, பாதசாரிகள் நடந்து செல்ல பிரத்யேக சாலை அமைக்கப்பட உள்ளது. வெயில், மழை போன்றவற்றில் இருந்து மக்களை காக்கும் விதமாக, அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேற்கூரையும் அமைக்கப்பட உள்ளது என்றாா்.

Tags:    

Similar News