உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைக்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்த காட்சி.

மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை- தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய 25 கடைகளுக்கு அபராதம்

Published On 2023-07-16 09:06 GMT   |   Update On 2023-07-16 09:06 GMT
  • பிளாஸ்டிக்கை சாலையில் வீசுவதால் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.
  • ஆய்வில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டது.

நெல்லை:

நெல்லை சந்திப்பு, சிந்துபூந்துறை பகுதிகளில் அதிகமாக பிளாஸ்டிக் பயன்பாடு இருப்பதாக மாநகராட்சி கமிஷனருக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

பிளாஸ்டிக்கை பயன்படுத்தி விட்டு அவை சாலையில் வீசப்படுவதால் மழை நீர் வடிகால் ஓடைகளில் அடைப்பு ஏற்படுகிறது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிக்கன், மட்டன் கடைகள், மீன் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாக காணப்படுவதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதனைத்தொ டர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர வின்படி நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்த லின் பேரில் தச்சநல்லூர் மண்டலத்திற்கு உட்பட்ட சிந்து பூந்துறை, உடையார்பட்டி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் சுகாதார ஆய்வா ளர் முருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் அங்குள்ள 35 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 10 கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கடை உரிமையா ளர்களுக்கு ரூ.3 ஆயிரத்து 300 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல் வண்ணார்பேட்டை பகுதியில் சுகாதார ஆய்வாளர் சங்கர நாராயணன் தலைமையிலான குழுவினர் 15 கடைகளில் ஆய்வு நடத்தினர். அதில் 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் கைப்பற்றப்பட்டு அந்த கடைகளுக்கு ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இந்த பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையானது தொடர்ந்து அனைத்து கடைகளிலும் மாநகரம் முழுவதும் நடைபெறும் என்று கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News