உள்ளூர் செய்திகள்

கட்டுமான பணியை ஷா நவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

திட்டச்சேரியில் ரூ.60 லட்சம் மதிப்பில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம்

Published On 2023-05-11 15:28 IST   |   Update On 2023-05-11 15:28:00 IST
  • இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  • திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டார்

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சியில், 15-ஆவது நிதிக்குழு சுகாதார மானியத்தின் கீழ், ரூ.60 லட்சம் மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமானப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்பணியை நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வெள்ளத்திடல், வாணியத் தெரு, இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் புதிய சமுதாயக் கூடம் கட்டுவதற்கான இடங்களை பார்வை யிட்டார்.திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும் எம்.எல்.ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், ரிபாயுதீன், பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன், இளநிலை உதவியாளர் கோவிந்தராஜ் மற்றும் பொது மக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News