உள்ளூர் செய்திகள்

நேரு உருவப்படத்திற்கு முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளார்.

பிறந்த நாளையொட்டி நேரு உருவப்படத்துக்கு காங்கிரசார் மரியாதை- முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் பங்கேற்பு

Published On 2023-05-27 14:26 IST   |   Update On 2023-05-27 14:26:00 IST
  • தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது.
  • ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நெல்லை:

இந்தியாவின் முதல் பிரதமர் நேருவின் பிறந்த நாள் விழா இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் கொண்டா டப்பட்டது. இதனை யொட்டி வண்ணார்ப் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நேருவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் 20 முதல் 25 இடங்களில் கழிவு நீர் கலக்கிறது. தென் மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் விவசாய தேவைக் காக பயன்படுத்தப்படும் இந்த தாமிர பரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி விரைவில் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளோம். அதனை எப்போது நடத்துவது என்பது குறித்து நிர்வாகி களுடன் கலந்து ஆலோசித்து விரைவில் போராட்டத்தை நடத்துவோம் என்றார்.

நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சொக்கலிங்ககுமார், கவி பாண்டியன், பரணி இசக்கி, துணைத்தலைவர்கள் வெள்ளை பாண்டியன், வண்ணை சுப்பிரமணியன், பேட்டை சுப்பிரமணியன், மாரியப்பன், மண்டல தலைவர்கள் ரசூல் மைதீன், ஜெய்னுல் ஆப்தீன், ராஜேந்திரன், முகமது அனஸ் ராஜா, மாவட்ட செயலாளர்கள் செய்யதலி, மணி, முருகன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் அன்சாரி, மாவட்ட அமைப்பு சாரா தொழி லாளர் அணி தலைவர் ஜாகிர் உசேன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News