உள்ளூர் செய்திகள்
கூடுவாஞ்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
- செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் தனசேகர், வட்டார தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூடுவாஞ்சேரி:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசை கண்டித்தும் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கூடுவாஞ்சேரி பஸ்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் தனசேகர், வட்டார தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.