உள்ளூர் செய்திகள்

ஓசூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-08-06 13:50 IST   |   Update On 2022-08-06 13:50:00 IST
  • காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.

ஓசூர், 

மத்திய பா.ஜ.க. அரசு, அரிசி, பால்,தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீதம் ஜி.எஸ்.டி விதித்திருப்பதை கண்டித்தும், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்தும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓசூர் ரெயில் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு, மேற்கு மாவட்ட தலைவர் எஸ்.ஏ.முரளிதரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மாதேஷ், துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில், கட்சியினர் திரளாக கலந்துகொண்டனர்.ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திடீரென கட்சியினர் ரெயில் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், கட்சி நிர்வாகிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தினர், இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News