உள்ளூர் செய்திகள்

நெல்லையில் போலி ஆவணம் மூலம் வாரிசு சான்றிதழ் பெற்றதாக புகார்- ரத்து செய்யக்கோரி மேயரிடம் மனு

Published On 2023-09-05 09:16 GMT   |   Update On 2023-09-05 09:16 GMT
  • பொதுமக்கள் திடீரென மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதற்கு துணை மேயர் ராஜூ முன்னிலை வகித்தார்.

மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். திடீரென அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து அவர்கள் மேயர் சரவணணிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை தாலுகா பேட்டை வி.வி.கே. தெருவில் வசிக்கும் சிதம்பரம் என்பவரது மகன் கலுசலிங்கம் என்பவர் கடந்த ஜூன் மாதம் 21-ந்தேதி உடல்நலக்குறைவால் இறந்தார். அவரின் மனைவி சாந்திக்கு சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். சாந்தி கடந்த 2012-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

இந்நிலையில் கலுசலிங்கத்தின் ரூ.3 கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க போலியாக சிலர் வாரிசு சான்று தயார் செய்துள்ளனர். ரூ.25 லட்சம் வரை செலவு செய்து போலியான ஆவணங்களை கொடுத்து வாரிசு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. எனவே அதனை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

Tags:    

Similar News