உள்ளூர் செய்திகள்

கோவையில் 5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக வாலிபர் மீது புகார்

Published On 2023-09-06 14:45 IST   |   Update On 2023-09-06 14:45:00 IST
  • புதிதாக திருமணமான பெண்ணும் சேர்ந்து மிரட்டுவதால் அதிர்ச்சி
  • பொள்ளாச்சியில் சிறுமியை துன்புறுத்தியதாக போக்சோ வழக்கில் சிக்கியவர்

கோவை.

கோவை வேடப்பட்டி பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் கோவை சாய்பாபா காலனி போலீசில் ஒர புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியுள்ளதா வது:-

கோவை பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 38 வயது நபருக்கும், எனக்கும் இணையதளம் மூலமாக வரன் பார்த்து திருமணம் நடந்தது. தற்போது அவர் சாய்பாபா காலனியில் வாசித்து வருகிறார்.

திருமணமாகி சில மாதங்கள் அவருடன் நான் வாழ்ந்து வந்தேன். அப்போதுதான் அவரின் பல்வேறு மோசடி முறைகேடுகள எனக்கு தெரிய வந்தது. பொள்ளாச்சியில் சிறுமி ஒருவரை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக் கில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலக்காட்டை சேர்ந்த இளம்பெண் ஒருவ ரையும் திருமணம் செய்து அவரிடம் பணம் நகை வாங்கி ஏமாற்றி உள்ளார். கோவையை சேர்ந்த இன்னொரு பெண்ணையும் அவர் இதே போல் திரும ணம் செய்து பணம் நகை வாங்கி மோசடி செய்துள்ளார். எனக்கு தெரிந்து அவர் 5 பெண்களை திரும ணம் செய்து இதுபோல் மோசடி செய்துள்ளார்.

எனக்கு திரும ணத்தின்போது வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகை மற்றும் பணத்தை அவர் திரும்ப தரவில்லை. அவரின் செயல்பாடு பிடிக்காமல் நான் அவரிடம் வாழாமல் திரும்ப வந்து விட்டேன். எனக்கு அவர் 40 லட்ச ரூபாய் தர வேண்டி உள்ளது.

எனது பணம், நகையை திருப்பி தராமல் செல்போனில் அழைத்து தொடர்ந்து மிரட்டல் விடுத்து வருகிறார். அவர் மீதும் அவருக்கு துணையாக உள்ள அவரது ெபற்றோர் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடைசியாக அவர் மேலும் ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்று தெரியவந்தது . அந்தப் பெண்ணும், அவரு டன் சேர்ந்து என்னை மிரட்டி வருகிறார். போலீசார் அவர் மீதும், குடும்பத்தினர் மீதும உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

அந்த பெண் புகாரின் பேரில் வாலிபர், அவரது பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News