உள்ளூர் செய்திகள்
துபாயில் வேலை வாங்கி தருவதாக மோசடி - டிராவல்ஸ் நிறுவனம் மீது புகார்
- கார்த்திகேயன் என்பவரிடம் 1,46,200 பணம் கொடுத்தேன்.
- கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை.
கோவை சாரமேடு பகுதியை சேர்ந்த கயுப்கான் (வயது49) என்பவர் கரும்புக்கடைபோலீசில் கொடுத்து உள்ள புகார் மனுவில், நான் துபாய் செல்வதற்காக திருச்சி திருவானைக்கால் டிராவல்ஸ் நிறுவன ஊழியர் கார்த்திகேயன் என்பவரை தொடர்பு கொண்டேன்.
அவரிடம்ரூ.1,46,200 பணம் கொடுத்தேன். ஆனால் எனக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. எனவே நான் திரும்பி வந்து விட்டேன்.
கார்த்திகேயனை தொடர்புகொண்டு துபாயில் வேலை இல்லை, என்னை ஏமாற்றி விட்டீர்கள், நான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கேட்டேன். அவர் தர மறுத்து மிரட்டல் விடுப்பதாக கூறப்பட்டு உள்ளது. இது குறித்து கரும்புக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.