உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவ- மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சையில் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- டெல்டா மாவட்டங்களில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
- காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து போராட்டம்.
தஞ்சாவூர்:
காவிரியில் உடனே தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி இன்று டெல்டா மாவட்டங்களில் முழு கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
அந்த வகையில் விவசாயி களுக்கு ஆதரவாகவும், முழு கடைய டைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ -மாணவிகள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் சந்துரு தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் காவிரியில் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசு, போராட்டத்தை தூண்டிவிடும் கர்நாடக பா.ஜ.க மற்றும் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்காத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷ ங்கள் எழுப்பினர்.இதில் ஏராளமான மாணவ -மாணவிகள் கலந்து கொண்டனர்.