உள்ளூர் செய்திகள்

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் விக்கிரவாண்டி அருகே பயனாளிகள் கட்டி வரும் வீட்டை விழுப்புரம் கலெக்டர் பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு

Published On 2023-06-18 07:17 GMT   |   Update On 2023-06-18 07:17 GMT
  • விக்கிரவாண்டியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பழனி நேரில் ஆய்வு செய்தார்.
  • குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி நேற்று பிற்பகல் விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ரெட்டிக் குப்பம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்படு கின்ற ரேஷன் கடை கட்டு மான பணிகளை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும், கயத்துார் கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெறும் கட்டுமான பணிகளையும், துவக்க பள்ளி வகுப்பறை கட்டிட பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கன் வாடி மையத்திற்கு சென்ற கலெக்டர், குழந்தை களை சரியான முறையில் பராமறிக்கின்றனரா என்பதை பார்வையிட்டார். ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், ஒன்றிய பொறி யாளர்கள் இளையராஜா, நடராஜன், கருணாகரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கமலக்கண்ணன், செல்வி முருகையன், ஊராட்சி செய லாளர்கள் வெங்கடேசன், சித்ரா உட்பட பலர் இருந்த னர்.

Tags:    

Similar News