உள்ளூர் செய்திகள்

தண்டேகுப்பம் அரசு தொடக்க பள்ளியில் தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி தமிழ் எழுத்துக்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடிய காட்சி.

தண்டேகுப்பம் அரசு பள்ளியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-08-30 15:27 IST   |   Update On 2023-08-30 15:28:00 IST
  • இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பட்டா வேண்டி மனுக்களை கொடுத்தனர்.
  • தண்டே குப்பம் கிராம அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார்.

 தருமபுரி, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் கும்மனூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட எல்லப்பன் பாறை பகுதியில் பழங்குடியினர் நலத்துறை நிதியின் கீழ் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக இருளர் இன மக்களுக்காக கட்டப்பட்டு வரும் வீடுகளை மாவட்ட கலெக்டர் சாந்தி கள ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு வசித்து வரும் இருளர் இன மக்கள் மாவட்ட கலெக்டரிடம் அப்பகுதிக்கு தேவையான அடிப்படை வசதி மற்றும் பட்டா வேண்டி மனுக்களை கொடுத்தனர்.மாவட்ட கலெக்டரும் தகுதியான மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பாலக்கோடு வட்டம் தண்டே குப்பம் கிராம அரசு தொடக்கப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அப்பள்ளியில் படிக்கும் அனைவரும் இருளர் இன மாணவர்கள் எனவும், அனைவருடனும் காலை சிற்றுண்டி, அவர்க ளுக்கு பள்ளியில் உள்ள வசதிகள், ஆசிரியர் சொல்லி கொடுக்கும் பாடங் கள் தொடர்பாகவும், மேலும் வகுப்பறை சுவரில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தொடர் பாகவும் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

Tags:    

Similar News