உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்த காட்சி.




விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2022-06-29 09:17 GMT   |   Update On 2022-06-29 09:17 GMT
  • தெற்கு குளத்தூர் பகுதியில் ரூ.1.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.
  • பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

தூத்துக்குடி:

விளத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் மந்திகுளம் ஊராட்சிக்குட்பட்ட தெற்கு குளத்தூர் பகுதியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் பிரதமர் விவசாய நீர் பாசன திட்டம், நீர்வடி பகுதி மேம்பாட்டின் கீழ் ரூ.1.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடந்து வருகிறது.

2.70 ஏக்கர் பரப்பளவில் இயறகை வள மேம்பாட்டு பணியின் கீழ் நடைபெற்று வரும் ஊரணி சீரமைக்கும் பணியினை கலெக்டர் செந்தில்ராஜ் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பணி முடிவடையும்போது 4.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும் என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பூசனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.2.86 லட்சம் மதிப்பில் 0.39 ஏக்கர் பரப்பளவில் தடுப்பணை அமைக்கும் பணியினை ஆய்வு செய்தார். இப்பணி முடிவடையும்போது 2.80 ஹெக்டேர் பரப்பளவு பாசனங்கள் பயன்பெறும்.

வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் மந்திக்குளம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் கீழ் மந்திக்குளத்தில் காசிநடாருக்கு சொந்தமான நிலத்தில் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மதிப்பில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியிணை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மந்திக்குளம் பகுதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை ஆய்வு செய்யப்பட்டது. மேலும் இப்பணிகளை விரைந்து முடித்து விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட துறை சார்ந்த அலுவலர்களுக்கு கலெக்டர் செந்தில்ராஜ் உத்தர விட்டார்.

ஆய்வின் போது வேளாண்மை இணை இயக்குநர் முகைதீன், துணை இயக்குநர்கள், வேளாண்மை, உழவர் பயிற்சி நிலையம், நுண்ணீர் பாசனம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார், தோட்டக்கலை உதவி இயக்குநர், வேளாண்மை செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், கோவில்பட்டி ஆர்.டிஓ. ஷீலா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொதுமக்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News