வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- ரூ. 1 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டுள்ளதை ஆய்வு.
- பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஊராட்சி ஒன்றியம், வக்ராநல்லூர் ஊராட்சியில் ரூ.33.04 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட பள்ளிக்கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருவதையும், ரூ.5.65 லட்சம் மதிப்பீட்டில் மதியஉணவு சமையல் கூடம் கட்டுப்பட்டு உள்ளதையும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் மேற்கூரையில் ரூ.1.77 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்புடன் கூடிய செங்குத்து உறிஞ்சுக்குழி அமைக்கப்பட்டு உள்ளதை யும், வக்ராநல்லூர் பகுதியி லுள்ள அங்கான்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்ட சத்து உணவு குறித்தும், ரூ.1.565 லட்சம் மதிப்பீட்டில் பூதமங்கலம் ஊராட்சி நூலகத்தில் மேற்கொள்ள ப்பட்டுள்ள மேம்பாட்டு பணிகளையும், நூலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் புத்தகத்தினையும், நூலக வருகைப்பதிவேடு குறித்தும் கலெக்டர் சாருஸ்ரீ பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் பணிகளை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவி ட்டார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொ றியாளர் சடையப்பன், உதவி செயற்பொறியாளர்கள் சிவகுமார், ரங்கராஜன், ஒன்றியக்குழு தலைவர் மனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.