உள்ளூர் செய்திகள்

கடலூரில் வெளிநாடுகளில் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சிகலெக்டர் தகவல்

Published On 2023-09-02 07:20 GMT   |   Update On 2023-09-02 07:20 GMT
  • உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
  • வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும்.

கடலூர்:

கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி யிருப்பதாவது -

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி பயில அடிப்படை தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட தகுதித் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொறியியல் மற்றும் மேலாண்மை தூய அறிவியல் மற்றும் பண்பாட்டு அறிவியல் வேளாண் அறிவியல் மற்றும் பயன்பாட்டு அறிவியல் சர்வதேச வர்த்தகம், பொருளாதார, கணக்கியல் நிதி, மனிதநேயம், சமூக அறிவியல். நுண்கலை சட்டம், கலை மற்றும் அறிவியல், போன்ற படிப்புகளை வெளி நாடுகளில் பயில விரும்பு வராக இருக்க வேண்டும். குடும்ப வரு மானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், இப்பயிற்சிக்கான செலவீனம் தாட்கோவால் வழங்கப்படும். இப்பயிற்சி முடித்து தேர்ச்சி பெறுவதன் மூலம் மாணாக்கர்கள் தாம் விரும்பும் வெளி நாடு களிலுள்ள கல்வி நிறு வனத்தில் மேல் படிப்பி னை தொடர்வதற்கு வாய்ப்பு பெறலாம். இதற்கு தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்யலாம் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News