உள்ளூர் செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்

நடிகர் பூ ராமு மறைவு - முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

Update: 2022-06-27 17:08 GMT
  • நடிகர் பூ ராமு 2008-ல் சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் அறிமுகமானார்.
  • பல்வேறு படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.

சென்னை:

தமிழ் திரையுலகின் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டவர் பூ ராமு. 2008-ம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளியான பூ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் நீர்ப்பறவை, தங்க மீன்கள், பரியேறும் பெருமாள், பேரன்பு, கர்ணன், சூரரைப் போற்று உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மத்தியிலும் நீங்கா இடம்பிடித்தார் பூ ராமு.

இதற்கிடையே, உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பூ ராமு சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

இந்நிலையில், நடிகர் பூ ராமு மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம்கொண்ட நடிகர் பூ ராமு மறைவெய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News