உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம்
அம்பை நகராட்சியில் தூய்மை விழிப்புணர்வு பிரசார பேரணி
- நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
- நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார்.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்கத்தின் படி நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் தலைமை தாங்கி கொடியசைத்து மாணவர்களின் தூய்மை விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையாளர் ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தார், நிகழ்வில் உடன் சுகாதார ஆய்வாளர் சிதம்பர ராமலிங்கம், வார்டு கவுன்சிலர் அழகம்மை, மாவட்ட பிரதிநிதி ராதாகிருஷ்ணன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கோகிலா மற்றும் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர், பரப்புரையாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.