இருதரப்பினரிடையே மோதல்: 8 பேர் கைது
- 17 வயது சிறுவன் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டின் வழியில் நிறுத்தினார்.
- 8 பேரை கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே கோணேகவுண்டனூர் ஜெயின்நகரைச் சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகன் சூர்யா (வயது18). இவர் சம்பவத்தன்று சிந்தகப்பள்ளி-நாரகப்பள்ளியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
கோவிலுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சிந்தகப்பள்ளி அருகே வரும்போது அதேபகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டின் வழியில் நிறுத்தினார்.
இதுகுறித்து சூர்யா அந்த சிறுவனிடம் தட்டிகேட்டார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், சிறுவனின் தரப்பினரைச் சேர்ந்த வேலன் என்கிற வேலு (40), வேணுகோபால் (31), அப்பு என்கிற விஜய் ஆகியோர் சூர்யாவை தாக்கினர்.
இதுகுறித்து சூர்யா மகாராஜா கடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலன், வேணுகோபால் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.
இதேபோன்று 17 வயது சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா மற்றும் அவரது தரப்பினரைச் சேர்ந்த பிரசாந்த் (24), சம்பத் (48), முனியப்பன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இருதரப்பினர் மோதல் காரணமாக 8 பேரை கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.