உள்ளூர் செய்திகள்

சிதம்பரத்தில் நகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட காட்சி.

சிதம்பரத்தில் நகர காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டம்

Published On 2023-04-09 12:50 IST   |   Update On 2023-04-09 12:50:00 IST
  • மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
  • மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்

கடலூர்:

சென்னைக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்டிய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை விடுதலை செய்யக்கோரி சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை மக்கின் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி ராதா, மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா. சம்பத்குமார் சம்பந்த மூர்த்தி, இளைஞர் அணி மாவட்ட தலைவர் அன்பு என்கின்ற அன்பரசன், நகர செயல் தலைவர் தில்லை. குமார், மாவட்ட செயலாளர் சின்ராஜ் நெல்சன், மாவட்ட ஓ.பி.சி. குமரவேல் ஆகியோர் முன்னிலை வைத்தனர். பரங்கிப்பேட்டை வட்டார தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். மாநில செயலாளர்கள் சித்தார்த்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ரங்கநாதன், மாவட்டத் துணைத்தலைவர்கள் குமார், வெங்கடேசன், சண்முகசுந்தரம், மாவட்ட பிரதிநிதி வேளாங்கண்ணி, மாவட்ட செயலாளர் சசிகுமார், நகர பொருளாளர் மிஸ்கின் பாய், அண்ணாமலை நகர் நகர தலைவர் சக்திவேல், பிரதிநிதி மீதிகுடி ராஜவேல், சிதம்பரம் சட்டமன்ற தொகுதி இளைஞரணி தலைவர் அபு சையத், கலை பிரிவு தலைவர்கள் பொன். மாதவ ஷர்மா நாராயணசாமி, இளைஞர் அணி ராஜ்குமார், பாலகிருஷ்ணன், லாரன்ஸ், தில்லை. சித்தார்த்தன், கலியபெருமாள், சக்திவேல், சஞ்சய், ஆனந்தராஜ், மகளிர் அணி மாவட்ட செயலாளர்கள் அஞ்சம்மாள், ருக்மணி, ராஜேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சின்ராஜ் நன்றி கூறினார்

Tags:    

Similar News