உள்ளூர் செய்திகள்

சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

சூளகிரி அரசு பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Published On 2022-12-08 14:55 IST   |   Update On 2022-12-08 14:55:00 IST
  • சுற்றுசுழல் பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
  • தமிழகமாக மாற்ற ஒவ்வொரு மாணவனும் முன்வந்து துணி பை மற்றும் மஞ்சப்பை உபயோகிக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் - சூளகிரி தாலுகா, சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட சுற்றுசுழல் பாதுகாப்பு துறை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு நடனம், நாடகம், ஒயிலாட்டம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் ராமசந்தின், சதிஷ், பெருமாள், மற்றும் ஆசிரியர்கள் தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக சுற்றுசுழல் பாதுகாப்பு மாவட்ட பொறியாளர் வெங்கடேஷ், சூளகிரி தாலுகா சுற்றுசுழல் பாதுகாப்பு உதவி பொறியாளர் ரங்கசாமி மற்றும் சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், சிவக்குமார், உதவி பி.டி.ஒ டென்சிங் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தமிழ்நாடு மாசு கட்டுபாடுகலை குழு மதுரை அலங்காநல்லூர் மற்றும் சென்னையில் இருந்து வருகை தந்தனர். பிளாஸ்டிக் ஒழித்து சுகாதாரமான தமிழகமாக மாற்ற ஒவ்வொரு மாணவனும் முன்வந்து துணி பை மற்றும் மஞ்சப்பை உபயோகிக்க உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

முடிவில் வட்டார சுற்றுசுழல் அதிகாரி சூளகிரி தாலுகாவை பிளாஸ்டிக் பை , பிளாஸ்டிக் கப் , பிளாஸ்டிக் பொருட்களை அதிரடியாக ஒழிக்க போவதாக உறுதி கூறினார்.

Tags:    

Similar News