உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை ஊக்குவிக்க கூடாது

Published On 2022-08-30 15:36 IST   |   Update On 2022-08-30 15:36:00 IST
  • பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.
  • மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும்

ஊட்டி:

குன்னூர் புனித மரியன்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடந்தது. சிறப்பு விருந்தினராக மனநல மருத்துவர் டாக்டர் புணர்ஜீத் மற்றும் டாக்டர் ரமேஷ், அரசு பொதுநல மருத்துவர் டாக்டர் பாரதி ஆகியோர் கலந்துகொண்டு பெற்றோர்களுக்கு இடையே குழந்தைகளை கவனிக்கும் முறையைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்

டாக்டர்கள் ேபசும் போது கூறியதாவது:-

குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே செல்போன்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பிள்ளைகள் சிறு வயதில் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி திருத்த வேண்டும்.

பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டை கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்கிட வேண்டும். மேலும் சிறு வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்தல் உடல், மன அளவில் பாதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்பு கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலன் பற்றிய கருத்துக்களை மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தனர். தலைமை ஆசிரியர் பேசுகையில் மாணவிகள் விடுப்பு எடுக்காமல் வருகை புரிய வேண்டும் என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News