உள்ளூர் செய்திகள்

தங்க பதக்கம் வென்ற மாணவிகளை ஆசிரியர்கள் பாராட்டிய போது எடுத்தபடம்.

கெலமங்கலத்தில் சதுரங்க போட்டிகள்: தங்கபதக்கம் வென்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

Published On 2022-07-24 14:00 IST   |   Update On 2022-07-24 14:00:00 IST
  • கெலமங்கலம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 20 -ம் தேதி நடைபெற்றது.
  • 2 மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளியில் 44-வது சதுரங்க ஒலிம்பியாட்போட்டிகளை முன்னிட்டு கெலமங்கலம் வட்டார அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த 20 -ம் தேதி நடைபெற்றது.

இந்த போட்டியில் காமராஜர் விருது பெற்ற கெலமங்கலம் அரசு மகளிர் உயர் நிலைப்பள்ளி மாணவிகள் 4 பேர் பங்கேற்றனர். இதில் ஐஸ்வர்யா மற்றும் ஹேமாவதி ஆகிய 2 மாணவிகள் முதலிடத்தில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு வழிகாட்டி ஆசிரியை கவிதா, பள்ளி தலைமையாசிரியர் சாந்தி, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வழிப்பாட்டு கூட்டத்தில் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

Similar News