உள்ளூர் செய்திகள்

சென்னையில் இருந்து செல்லும் டெல்லி விமானத்தில் திடீர் எந்திர கோளாறு: 2 மணி நேரம் தாமதம்-பயணிகள் தவிப்பு

Published On 2023-07-25 16:21 IST   |   Update On 2023-07-25 16:21:00 IST
  • விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.
  • உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆலந்தூர்:

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 6:55 மணிக்கு, டெல்லி செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 168 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 174 பேருடன் புறப்பட தயாரானது.

விமானம் ஓடுபாதையில் செல்வதற்கு முன்பு விமானத்தின் எந்திரங்களை விமானி சரிபார்த்த போது அதில் கோளாறு இருப்பதை அறிந்தார். உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதை அடுத்து விமானம் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விமானத்தில் எந்திரம் பழுது பார்க்கப்பட்டு இன்று காலை 8:10 மணிக்கு தாமத மாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட எந்திரக்கோளாறை சரியான நேரத்தில், விமானி கண்டுபிடித்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

Similar News