உள்ளூர் செய்திகள்

தாசில்தார் செந்தில்குமாரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

செல்போன் கோபுரம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்; தாசில்தாரிடம் மனு

Published On 2023-07-13 07:03 GMT   |   Update On 2023-07-13 07:03 GMT
  • பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி நிர்வாக அனுமதி பெறாமலும் பணிகள் நடக்கிறது.
  • கோபுரத்திலிருந்து வரும் கதிர்வீச்சால் பொதுமக்கள், நோயாளிகள் அனைவரும் பாதிக்கப்படுவர்.

சீர்காழி:

சீர்காழி தாசில்தார் செந்தில்குமாரை சந்தித்து திருமுல்லைவாசல் காந்திநகர் பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது :-

திருமுல்லைவாசல் காந்திநகரில் குடியிருப்பு, பள்ளிக்கூடம், மருத்துவமனை அருகருகே அமைந்துள்ள இடத்தில் தனியார் செல்போன் நிறுவனம் சார்பாக புதிய 5ஜி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் கருத்து கேட்காமலும், ஊராட்சி மன்ற நிர்வாக அனுமதி பெறாமலும், இந்த பணி நடக்கிறது.

செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டால் அதிலிருந்து ஏற்படும் கதிர்வீச்சால் மாணவர்கள், பொதுமக்கள், நோயாளிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவர்.

எனவே உடனடியாக செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தி கோபுரத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News