உள்ளூர் செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு
- கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர்.
- அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கடலூர்:
நெல்லிக்குப்பத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை விரிவாக்க பணிக்காக வடிகால் வாய்க்கால் அமைப்பதற்கு அளவீடு செய்யும் பணி செய்வதற்கு வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதிகாரிகள் நேற்று சென்றனர். அப்போது அதிகாரிகள் எடுத்த அளவீடு சரியான முறையில் இல்லை எனக் கூறி அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் குருமூர்த்தி, கல்வி செல்வன், கணேசன், ராஜி, நகர செயலாளர் திருமாறன், தமிழ் ஒளி, அம்பேத், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உட்பட 13 பேர் மீது நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.