உள்ளூர் செய்திகள்

பழுதாகி உடைந்து கிடக்கும் கலுங்கை படத்தில் காணலாம்

உடன்குடி தாங்கைகுளத்தில் உடைந்து போன கலுங்கு பகுதியை உடனடியாக சரி செய்ய வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை

Published On 2022-11-03 14:26 IST   |   Update On 2022-11-03 14:26:00 IST
  • தாங்கைகுளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும்
  • மழை பெய்து குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே பணிகளை முடிக்க வேண்டும்

உடன்குடி:

உடன்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெங்கட் ராமானுஜபுரம் ஊராட்சியில் 224.8 ஏக்கர் பரப்பளவில் தாங்கைகுளம் உள்ளது. இது ஒரு நீர்பிடிப்பு குளமாகும். இந்த குளத்திலிருந்து எந்தவிதமான கால்வாய் பாசனமும் கிடையாது.

இந்த குளம் முழுமையாக நிரம்பினால் சுமார் 2,000 ஏக்கர்விவசாய நிலங்களை பாதுகாக்கும். கடல் நீர்மட்டம் விவசாய விளைநிலங்களில் ஊடுருவாமல் தடுக்கப்படும். இந்த குளத்தின் மூன்று புறமும் கரையை உயர்த்த வேண்டும் என்றும், குளம் நிரம்பி மறுகால் பாயும் கலுங்கை 2 அடி உயர்த்த வேண்டும் என்றும், தற்போது பழுதாகி உடைந்து கிடக்கும் கலுங்கை உடனடியாக சீர் படுத்த வேண்டும் என்றும் இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் மழை பெய்து இக்குளத்திற்கு தண்ணீர் வருவதற்கு முன்பே இந்த பணிகளை முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Tags:    

Similar News