உள்ளூர் செய்திகள்

மாணவர்களுக்கு புத்தகங்களை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி. அருகில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ மற்றும் பலர் உள்ளனர்.

பெருமாள்புரம் மாநகராட்சி பள்ளியில் ஆங்கில வழி கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள்- அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2023-06-14 14:09 IST   |   Update On 2023-06-14 14:09:00 IST
  • ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
  • மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. வழங்கினார்.

நெல்லை:

பாளை பெருமாள்புரம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் எல்.கே.ஜி. முதல் 5-ம் வகுப்பு வரை ஆங்கில வழிக் கல்வியில் பயிலும் மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச பாடபுத்தகங்கள், இனிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மேலப்பாளையம் மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா, மாமன்ற உறுப்பினர் பொன்மாணிக்கம் ஜான், மேலப்பாளையம் பகுதி தி.மு.க. செயலாளர் துபை சாகுல், மேலப்பாளையம் பகுதி அவைத்தலைவர் ஆடிட்டர் உமா மகேஸ்வரன், பகுதி பொருளாளர் எட்வர்ட் ஜான், மாநகர பிரதிநிதி சாமுவேல், வட்ட செயலாளர்கள் ஜான் கென்னடி, கிங் பாலா, கழக பிரதிநிதிகள் கிறிஸ்டோபர், தினகரன், நிர்வாகிகள் பேராட்சி நாதன், கணேஷ்,சிவா, சரவணன், ஜேஸ்பர், தேவா, அலெக்ஸ், அட்டினா லூயிஸ், பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியமேரி கனகசீலி, உதவி தலைமை ஆசிரியர் பியூலா, ஆசிரியர் ஜார்ஜ் இனிகோ மற்றும் மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News