உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் புத்தக திருவிழா தொடங்கியது

Published On 2023-10-21 14:50 IST   |   Update On 2023-10-21 14:50:00 IST
  • அமைச்சர் மனோதங்கராஜ் கண்காட்சியை பார்வையிட்டார்
  • மாணவர்கள் புத்தக வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க வேண்டுகோள்

ஊட்டி,

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தில் நீலகிரி புத்தகத்திருவிழா நேற்று தொடங்கியது. இது வருகிற 29-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது. நீலகிரி புத்தகத்திருவிழாவை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அங்கு அரசு சார்பில் அமைக்கப்பட்டு உள்ள கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். முன்னதாக தேசிய விருதுபெற்ற கவிஞர் சீனு ராமசாமியின் புகார் பெட்டியின் மீது படுத்துறங்கும் பூனை என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தக திருவிழாவில் அமைக்கப்பட்டு உள்ள புத்தக கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் அவர் நிகழ்ச்சியில் பேசுகையில் கூறியதாவது:-

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தம் வகையில் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை சார்பில் புத்தகத்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு சுமார் 70-க்கும் மேற்பட்ட புத்தக அரங்குகள் அமைக்கப்பட்டு அங்கு பல்வேறு புத்தகங்கள் அடங்கிய தொகுப்புகள் பொதுமக்களின் பார்வைக் காக வைக்கப்பட்டு உள்ளன.

ஒரு புத்தகம் எழுத வேண்டுமெனில் பல்வேறு புத்தகங்களை படிக்க வேண்டும். அதேபோல மாணவ-மாணவிகள் எண்ணிய இலக்கை அடைய வேண்டுமெனில் தொடர்மு யற்சிகளை மேற்கொண்டு போராடி முன்னேற வேண்டும். ஒரு நல்ல புத்தகம் மனிதனின் வழிகாட்டியாக அமையும். எனவே வாசிப்பு பழக்கத்தை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும்.

நீலகிரி புத்தகத்திருவிழா வில் சமூகநலன், தோட்டக் கலை, ஆதிதிராவிடர்-பழங்குடியினர், மாசு கட்டுப்பாட்டு வாரியம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிகள் மற்றும் பள்ளிக்கல்வி துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

மேலும் நீலகிரி புத்தகத்திருவிழாவில் தினமும் பள்ளி-கல்லூரி மாணவர்களின் கலைநி கழ்ச்சி, இலக்கிய சொற்பொ ழிவு நடக்க உள்ளது. நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே புத்தக திருவிழா வெற்றி பெற அனைவரும் ஆதரவு தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ஊட்டி எம்.எல்.ஏ ஆர்.கணேஷ், மாவட்ட வனஅதிகாரி கவுதம், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்-பதிப்பாளர் சங்க உறுப்பி னர் அருண்மாதவன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, ஊட்டி வருவாய் கோட்டாட்சியர் மகராஜ், நகர்மன்ற தலை வர்கள் வாணீஸ்வரி (ஊட்டி), பரிமளா (கூடலூர்), ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மாயன் (ஊட்டி), கீர்த்தனா (கூடலூர்), ஆவின் பொதுமேலாளர் ஜெயராமன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ஷோபனா, முதன்மை கல்வி அதிகாரி கீதா, மாவட்ட சமூகநல அதிகாரி பிரவீணாதேவி, மாவட்ட நூலக அதிகாரி வசந்தமல்லிகா, ஊட்டி தாசில்தார் சரவணகுமார், வட்ட வழங்கல் அதிகாரி மகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News