ஊட்டி அருகே காணாமல் போனவர் பிணமாக மீட்பு
- தியாகராஜன் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
- லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
ஊட்டி,
குன்னூரை அடுத்த ஆறுகுச்சி மீன்மலையை சோ்ந்தவா் தியாகராஜன் (35), கூலி தொழிலாளி. இவருக்கு தங்க மணி என்ற மனைவியும், 2 மகன்கள் உள்ளனா்.
தியாகராஜன் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபட்டார். எனவே தங்க மணி கணவரிடம் கோபித்து கொண்டு சொந்த ஊரான கூடலூருக்கு சென்று விட்டாா். இதனால் தியாகராஜன் பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் அவர் கடந்த 20 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் காசோலை பகுதியில் உள்ள பாலத்தின் கீழ் ஆண் சடலம் கிடப்பதாக போலீசுக்கு தகவல் வந்தது. எனவே அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரித்தனா். அதில் பாலத்தின்கீழ் இறந்து கிடந்தவர் தியாகராஜன் என்பது தெரிய வந்தது.
அவர் எப்படி இறந்தார் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இதுதொடர்பாக தியாகராஜனின் மனைவி தங்கமணி அளித்த புகாரின் பேரில், லவ்டேல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.