உள்ளூர் செய்திகள்

மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விசைப்படகுகளை படத்தில் காணலாம்.

தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை - 262 படகுகள் கரையில் நிறுத்தம்

Published On 2023-10-11 08:49 GMT   |   Update On 2023-10-11 08:49 GMT
  • விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது என்று கூறுகின்றனர்.
  • இதனை வலியுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் விசைப்படகு உரிமையா ளர்கள் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை, மீதமுள்ள 6 நாட்களில் 3 நாட்கள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

வாரத்தில் 6 நாட்கள்மீன் பிடிக்க சென்றால் கடலில் மீன் கிடைப்பதில்லை. அவ்வாறு சென்றால் செலவுகள் அதிகமாக வரு கின்றன. 3 நாட்கள் பிடித்தால் மீன்கள் அதிக மாக கிடைக்கும். எனவே வாரத்தில் 3 நாட்கள் செல்ல வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

மீனவர்கள் போராட்டம்

ஆனால் விசைப்படகு தொழிலாளர்களோ வாரத்தில் 6 நாட்கள் மீன்பிடிக்கச் சென்றால் தான் எங்களது குடும்பம் வாழ்வாதாரம் பாதிக்காது. எனவே 6 நாட்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டும் என கூறி வருகின்றனர். இதனை வலி யுறுத்தி நேற்று விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று விசைப்படகு மீனவர்கள் 3 ஆயிரம் பேர், 2-வது நாளாக மீன்பிடிக்க செல்ல வில்லை. இதனால் தூத் துக்குடி மீன்படி துறைமுகத்தில் இன்று 262 விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு உள்ளன.

பேச்சுவார்த்தை

நேற்று இது தொடர்பாக மீன்பிடி தொழிலாளர், உரிமையாளர் ஆகியோரிடம் மீன்வள உதவி இயக்குநர் மோகன்ராஜ் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உரிமையாளர்கள் வாரத்தில் 3 நாட்களில் இருந்து 4 நாட்கள் மீன்பிடிக்க செல்லலாம் என கூறினார். ஆனால் மீன்பிடி தொழிலாளர்கள் வாரத்தில் 6 நாட்கள் கடலுக்கு செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனால் முடிவு எதுவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தன.

இதைத்தொடர்ந்து உரிமையாளர் மற்றும் தொழிலாளர்களிடம் தனித்தனியாக இன்று 2-ம் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

Tags:    

Similar News